மத்திய அரசின் கீழ் செயல்படும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கு 30 டெக்னீசியன் பணி வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுப்பிரிவினருக்கு 15 இடங்களும், எஸ்.சி-1, எஸ்.டி-6,ஓ.பி.சி-8 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க கெமிக்கல் எஞ்சினீயரிங் டிப்ளமோ படிப்பு படித்திருக்க வேண்டும்.அதில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் 50 சதவீதம் பெற்றிருந்தால் போதுமானது. எண்ணை சுத்திகரிப்பு, பெட்ரோலியம், மெட்ரோ கெமிக்கல், கெமிக்கல், உரநிறுவனம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் பணியனுபவம் இருக்கவேண்டும்
விண்ணப்பதாரர்கள் 1.8.12 தேதியில் 30 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.அரசு விதிகளின் படி ஓ.பி.சி பிரிவினருக்கு 3 வயதும், எஸ்.சி,எஸ்.டி பிரிவினருக்கு 5 வயதும் தளர்வு அனுமதிக்கப்படும்.தகுதி உள்ளவர்களை நிறுவனம் தேர்வுக்கு அழைக்கும்
ஏ4 வெள்ளைக்காகிதத்தில் குறிப்பிட்ட மாதிரியில் விண்ணப்ப படிவம் டைப் செய்து கையால் படிவத்தை நிரப்பி அனுப்ப வேண்டும்.
மேலும் விரிவான விபரங்களை www.bpcllcareers.in இணையதளத்தில் பார்க்கவும்.
Post a Comment