இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களுக்கு இடையே மின்சக்தியை திட்டமிடல், ஒருங்கிணைத்தல், மேற்பார்வை செய்தல் மற்றும் கட்டுப்படுத்தும் பணிகளில் மத்திய பகிர்ந்தளிக்கும் நிறுவனமாக பவர் கிரிட் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு மொத்தம் நாடு முழுவதும் பரந்து விரிவுபட்டு இயங்குவதுடன் சர்வதேச தரத்துடன் செயல்பட்டு வருகிறது. நாட்டின் மொத்த மின்பகிர்வில் 45 சதவிகிதம் இந்த நிறுவனத்தின் மூலமாகவே இருப்பது மற்றொரு சிறப்பாகும்.இவ்வளவு பிரசித்தி பெற்ற இந்த நிறுவனத்தில் பீல்டு இன்ஜினியர் மற்றும் பீல்டு சூப்பர்வைசர் பிரிவுகளில் உள்ள காலி இடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரிவுகள் மற்றும் காலி இடங்கள்:
பவர் கிரிட் நிறுவனத்தின் பீல்டு இன்ஜினியர் பதவி சி.எப்.இ., என்று பெயரில் 52ம், பீல்டு சூப்பர்வைசர் பதவி சி.எப்.எஸ்., என்ற பெயரில் 108ம் நிரப்பப்பட உள்ளது. இந்தப் பதவிகளுக்கு அரசு நிபந்தனைகளின்படி எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., உடல் ஊனமுற்றோர் போன்ற பிரிவினருக்கு இடஒதுக்கீடும் உள்ளது.
தேவைகள்:
பவர் கிரிட் நிறுவனத்தின் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 28.02.2013 அடிப்படையில் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். சி.எப்.இ., பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.இ., பி.டெக்., பி.எஸ்.சி.,(இன்ஜினியரிங்)அல்லது ஏ.எம்.ஐ.இ., படிப்பை எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பிரிவில் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும்.
பீல்டு சூப்பர்வைசர் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்கல்வி நிறுவனத்தின் மூலமாக எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ படிப்பைக் குறைந்தபட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஏனைய விபரங்கள்: தற்சமயம் நேர்காணல் வாயிலாகவே இந்தப் பதவிகளை நிரப்ப இந்த நிறுவனத்தின் நிர்வாகம் முடிவெடுத்துள்ள போதும் தேவைப்பட்டால் ஒரு தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சி.எப்.இ., பிரிவாக இருந்தால் ரூ.200/-ம், சி.எப்.எஸ்., பிரிவாக இருந்தால் ரூ.100/-ம் டி.டி., வாயிலாக (ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத்) Power Grid Corporation of India என்ற பெயரில் ஐதராபாத்தில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும். பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பம், டி.டி., மற்றும் உரிய இணைப்புகளை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி:
The Cheif Manager (HR)/HOP,
Power Grid Corporation of India Ltd.,
SRTS&I, Regional Headquarters,
Kavadiguda Main Road,
Secunderabad - 500080
Andhra Pradesh
விண்ணப்பிக்க இறுதி நாள் :
28.02.2013
மேலும் விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள்- தினமலர்
Post a Comment